Connect with us

    கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த முதல் மனைவி; மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் அதிசயம்..!!

    Second marriage

    Viral News

    கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த முதல் மனைவி; மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் அதிசயம்..!!

    Second marriage

    ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண்.

    இவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர். அடிக்கடி டிக்டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானவர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவதில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்கள் இருவருமே டிக்டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    இருவருக்கும் டிக் டாக்கில் ஃபாலோயர்ஸ் அதிகம் உள்ளனர். இருவரும் இணைந்து வீடியோக்களை உருவாக்கி அதிக பிரபலம் அடைந்து வருகின்றனர்.

    திருமணத்திற்கு முன் கல்யாண் விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ உருவாக்கி வந்துள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. சில காலம் நன்றாக இருந்த இவர்களது காதல் சில காரணங்களால் முறிந்தது.

    தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது. கல்யாண் கடைசியில் அவரை மறந்து விமலாவை மணந்து உள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நித்யஸ்ரீ
    கல்யாணை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி இருக்கிறார்.

    அதற்கு கல்யாண் தனக்கு திருமணம் ஆகி விட்டது என கூறி இருக்கிறார்.

    ஆனாலும் பிடிவாதமாக இருந்த நித்யஸ்ரீ இது குறித்து கல்யாண் மனைவி விமலாவிடம் கல்யாணிற்கும் தனக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டியுள்ளார்.

    இருவரும் ஏற்கனவே காதலித்து உள்ளனர் என்பதை தெரிந்து கொண்ட விமலா, இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று கல்யாண்- நித்யஸ்ரீ திருமணம் விமலா தலைமையில் நடைபெற்றது.

    தற்போது மூவரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

    கணவருக்கு முதல் மனைவியே இரண்டாவது திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!