World News
காதலித்து திருமணம் செய்த கணவர் 10 மாதங்களுக்குப் பிறகு பெண் என தெரிய வந்ததால் அதிர்ச்சியான மனைவி..!
காதலித்து திருமணம் செய்து 10 மாதங்களுக்கு பிறகு தனது கணவன் ஒரு பெண் என்று மனைவி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனோஷியாவின் ஜாம்போ பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.
அந்த ஆண், தன்னை அறுவை சிகிச்சை நிபுணர் என்றும், நிலக்கரி வியாபாரம் செய்யும் பிசினஸ் மேனாகவும் அறிமுகம் செய்து கொண்டார்.
இதனையடுத்து, அடுத்த மூன்று மாதங்களில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு 10 மாதங்களாக வாழ்ந்து வந்தனர்.
முதலில் மணப்பெண்ணின் வீட்டிலேயே புதுமணத் தம்பதி வசித்து வந்திருக்கிறார்கள்.
அப்போது, திருமணத்தை பதிவு செய்வதற்காக அந்த நபர் எந்த ஆவணமும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் அவர் மீது பெண்ணின் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனால் மனைவியுடன் அவர் தெற்கு சுமத்ராவுக்கு குடி பெயர்ந்தார்.
அங்கு, அந்த பெண்ணை அவரது பெற்றோர் உள்ளிட்ட எவரிடமும் பேசவிடாமல் அவர் அடைத்து வைத்திருந்தார்.
மேலும் தான் ஒரு தொழிலதிபராக இருந்தும் மனைவியின் பெற்றோரிடம் இருந்து அவ்வப்போது பணம் வாங்கியுள்ளார்.
போலீஸ் உதவியுடன் தங்கள் மகளை பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில்தான், 10 மாதங்களாக கணவனாக கருதப்பட்டவர் ஆணே இல்லை, அவர் உண்மையில் ஒரு பெண் என பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
உடல் உறவு கொள்ளும் போது கூட, வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, எனது கண்ணை கட்டிவிடுவார் எனவும் அந்த பெண் தெரிவித்திருக்கிறார்.
இதுபோக, மோசடி செய்த அந்த பெண்ணின் கல்விச்சான்றிதழ் கூட போலியானது.
இந்த விவகாரம் இந்தோனேஷியாவின் ஜாம்பி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண் சமூக வலைதளம் மூலம் தனக்கான ஆதரவை திரட்டி வருகிறார்.
