Viral News
தனக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்தை மருத்துவமனைக்கு எழுதி கொடுத்த பெண்..!
தன்னுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்த தான் படித்த மருத்துவக் கல்லூரிக்கு, தன்னுடைய 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நன்கொடையாக அளித்து ஆச்சர்யப் படுத்தி இருக்கிறார், ஆந்திராவைச் சேர்ந்த உமா தேவி கவினி.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், குண்டூரைச் சேர்ந்த, அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்தான் உமா தேவி.
இவர் குண்டூர் மருத்துவக் கல்லூரியில் தன்னுடைய மருத்துவப் படிப்பை 1965-ம் ஆண்டு முடித்தார்.
அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவர், அங்கேயே வேலை செய்து செட்டிலானார்.
அங்கு இம்யூனாலஜி நிபுணராகவும், ஒவ்வாமை நிபுணராகவும் தற்போது பணியாற்றி வருகிறார்.
குண்டூர் மருத்துவக் கல்லூரியின் 17வது ஆண்டு முன்னாள் மாணவர் சங்கத்தின் ரீயூனியன் கூட்டம் டல்லாஸில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட உமா தேவி, தன்னுடைய 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து முழுவதையும் குண்டூர் அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன் இறந்த தன்னுடைய கணவர் கனூரி ராமச்சந்திர ராவ் பெயரை வைக்க ஒப்புதல் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி இவருக்கு குழந்தைகள் இல்லை.
தன்னுடைய முழு சொத்தையும் மருத்துவமனைக்குக் கொடுத்துள்ள உமாதேவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
