Connect with us

    முதலிரவில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் காயங்களுடன் மயங்கிய மணப்பெண்; தப்பி ஓடிய மணமகன்; போலீசார் தேடுதல்..!

    Tamil News

    முதலிரவில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் காயங்களுடன் மயங்கிய மணப்பெண்; தப்பி ஓடிய மணமகன்; போலீசார் தேடுதல்..!

    நாகப்பட்டினம் அருகே முதலிரவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மணப்பெண், மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தலைமறைவான மணமகனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

    First night

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரைச் சேர்ந்தவர் நாகராஜன்.

    இவரது மனைவி பரமேஸ்வரி, வயது 48. இவரது மகள் நளினி, வயது 26.

    நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த தொழுதுாரைச் சேர்ந்தவர் பிச்சையன் மகன் ராஜ்குமார், வயது37.

    இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்வதற்காக பெரியவர்கள் பேசி முடிவு செய்தனர்.

    இவர்களின் திருமணம் ஆலத்தம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 27ல் திருமணம் நடந்தது.

    இந்நிலையில், மணப்பெண்ணின் தாய் பரமேஸ்வரி, எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்திருந்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    எனது மகளின் திருமணத்திற்கு வரதட்சணையாக 12 சவரன் நகை, பைக் மற்றும் மூன்று லட்சம் ரூபாய்க்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கினோம்.

    மாப்பிள்ளை வீட்டில் நடந்த முதலிரவின் போது மாப்பிள்ளை, என் மகளை இயற்கைக்கு மாறாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

    மகளின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள், முதலிரவு அறைக்கு ஓடியுள்ளனர்.

    அதை பார்த்து, ராஜ்குமார் தப்பி விட்டார்.

    உடல் முழுதும் காயங்களுடன் மயங்கி கிடந்த எங்கள் மகளுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மனநலம் பாதித்தவரை போல நடந்து கொண்ட மணமகன் ராஜ்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!