Tamil News
வறுமையிலும் நேர்மை; ரோட்டில் கிடந்த ரூ.2 லட்சத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த ஏழைத்தாய்; குவியும் பாராட்டுக்கள்..!!
சாலையில் கிடந்த ரூ. 2 லட்சத்தை எடுத்து சென்று உரியவரிடம் ஒப்படைத்த ஏழை பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
திருச்சி தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்வரி வயது.50
இவர் அப்பகுதியிலுள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு அந்த கடையில் ஒரு நாளைக்கு சம்பளமாக ரூ. 100 வழங்கப்படுகிறது.
வறுமையில் வாடும் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ராஜேஸ்வரி தினமும் அந்த கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அவர் கடைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த போது கடை அருகில் ஒரு காகிதப்பை கிடந்ததை கண்டு எடுத்தார்.
உடனே அந்த பையை எடுத்து திறந்து பார்த்துள்ளார். உள்ளே கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அடுத்தவர் பணத்திற்கு சிறிதும் ஆசைப்படாத அந்த பெண் உடனே அதனை எடுத்துச் சென்று தனது கடை முதலாளியிடம் கொடுத்துள்ளார்.
அவர்கள் எண்ணிப் பார்த்தபோது அதில் 2 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக கடை உரிமையாளர் பிரபாகரனும் ராஜேஸ்வரியும் அந்த பணத்தை தில்லை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த
ராஜேஸ்வரி நினைத்திருந்தால் தனது வறுமையை போக்க இந்த பணம் தேவையானது தான் என நினைத்து கடை முதலாளியிடம் சொல்லாமல் தனது வீட்டிற்கு சென்று இருக்கலாம்.
ஆனால் வறுமையில் வாடும் நிலையிலும் அவர் நேர்மையை கடைப்பிடிக்க தவறவில்லை.
அவர் செய்த செயல் இன்று அனைவரும் பாராட்டும் செயலாக புகழ்ந்து பேசப்படுகிறது.
ராஜேஷ்வரியின் நேர்மையை பாராட்டிய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேற்று தனது அலுவலகத்திற்கு அவரை வரவழைத்து அவரது நேர்மையை பாராட்டி ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கினார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வறுமையிலும் நேர்மை தவறாத ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
