Tamil News
நள்ளிரவு நேரம் பேருந்தின் பின் சீட்டில் இருந்து, முன் சீட்டில் உள்ள பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றவனுக்கு, அப்பெண் கொடுத்த தரமான பதிலடி…!!
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சில தினங்கள் முன்பு இரவு பெண் வக்கீல் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்துக்கு அரசு பஸ்சில் ஏறி சென்றுள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் திடீரென பின் இருக்கையில் இருந்து கை ஒன்று அந்த இளம்பெண் அருகே வந்துள்ளது.
திடீரென அதிர்ச்சி அடைந்த அந்த பெண், திரும்பி பார்த்துள்ளார்.
பின் இருக்கையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
முதலில் தெரியாமல் கை பட்டிருக்கும் என சாதாரணமாக அந்த பெண் அதனை அத்தோடு விட்டுள்ளார்.
ஆனால், பின் இருக்கையில் இருந்தபடி பெண் வக்கீல் மீது கை வைத்து தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் அந்த நபர்.
இதனால் ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த அந்த பெண் வக்கீல் தான் வைத்திருந்த குண்டூசியை எடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரின் கையை குத்தியுள்ளார்.
மேலும், அந்த நபரின் கை தனது இருக்கைக்குள் நுழைவதையும் அதை குண்டூசியால் குத்துவதையும் அந்த பெண் வக்கீல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
மேலும், இது பற்றி பஸ் டிரைவரிடம் கூறி, பேருந்தை நிறுத்தியுள்ளார்.
உடனடியாக போலீஸ்க்கும் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து, வானகரம் அருகே சென்று கொண்டிருந்த பஸ்சை கோயம்பேடு உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் நிறுத்தினர்.
பின்னர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பெண் வக்கீல் அளித்த புகாரின் பேரில் அந்த நபரிடம் காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவரது பெயர் ராகவன் (40) கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் பெண் வக்கீல் தான் பஸ்சில் எடுத்த குண்டூசி வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராகவனின் முகத்தையும் பதிவு செய்து இவர்தான் அந்த நபர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
பெண் வக்கீலின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
