Uncategorized
கள்ளக்காதல் (illegal affair) கண்ணை மறைத்ததால், முறை மாமனுடன் சேர்ந்து கணவரை போட்டுத் தள்ளிய இளம்பெண்; சிக்கியது எப்படி தெரியுமா..??
கள்ளக்காதல் (illegal affair) கண்ணை மறைத்ததால், முறை மாமனுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் கணவரை கொலை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அருகே ரகுபதியூர் பகுதியைச் சேர்ந்த முருகன், சாந்தி தம்பதியினரின் மகன் நவீன்குமார்.
29 வயதான இவர் அப்பகுதியில் சலூன் கடை ஒன்றினை நடத்தி வந்தார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன் குமாருக்கும் குரும்பேரி கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் மகள் விசித்ரா (23) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு மோனிஷ் (4) என்கிற மகனும், தன்ஷிகா (2) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் விசித்ரா தனது அத்தை மகனான குமாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (24) என்பவருடன் நெருங்கிப் பழகியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி, நவீன் குமார் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடப்பதாக நவீன் குமாரின் தந்தை முருகனிடம் விசித்ரா மற்றும் சீனிவாசன் தெரிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நவீன் குமாரை கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நவீன் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து நொறுங்கிப்போன முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகனின் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் நவீன் குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மகனின் மரணத்தில் ஏதோ தவறு நேர்ந்திருப்பதாக உணர்ந்த முருகன் தம்பதி தங்களது மருமகளை கண்காணிக்கத் துவங்கினர்.
இதையடுத்து, விசித்ராவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த நவீன்குமாரின் தாயார் சாந்தி மருமகளுக்கு தெரியாமல் அவரது செல்போனை சோதனை செய்தார்.
அதில் சீனிவாசனிடம், விசித்ரா அடிக்கடி பேசி வருவதும், வாட்ஸ் -அப் மூலம் பல தகவல்களை பரிமாறிக்கொண்ட தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, நவீன்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சாந்தி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் மீது கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாமலும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமாரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து திருப்பத்தூர் – திருவண்ணாமலை பிரதான சாலை தண்ணீர் பந்தல் அருகே நேற்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அதில், நவீன்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மயானத்தில் புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து உடல்கூறு ஆய்வு செய்ய வேண்டும், அவரது மனைவி விசித்ராவிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என முழுக்கமிட்டனர்.
இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்துார் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையிலான கிராமிய காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், நவீன்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், விசித்ரா விடம் விசாரணை நடத்தி உண்மை நிலவரம் கண்டறியப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர்.
இதனையேற்று மறியலை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
