Connect with us

    16 வயதில் வீட்டை விட்டு காதலனுடன் ஓடிய பெண்; 56 வருடங்களுக்கு பின் வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்..!.

    Woman joins

    Viral News

    16 வயதில் வீட்டை விட்டு காதலனுடன் ஓடிய பெண்; 56 வருடங்களுக்கு பின் வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்..!.

    56 ஆண்டுகள் கழித்து பெண் ஒருவர் குடும்பத்தினரை மீண்டும் சந்தித்துள்ள சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.

    Woman joins

    ஆந்திரபிரதேச மாநிலம், நரசிப்பட்டினம் பகுதியில் உள்ள சின்னபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கெளரி பார்வதி. 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

    அதன் பின் 56 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரது உறவினர்கள் சந்திக்க வந்துள்ளனர்.

    அவரை காண 1300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள மேலகரந்தை கிராமத்துக்கு வந்திருக்கின்றனர்.

    நம்மாள்வர் கெளரி தம்பதியினர் தூத்துக்குடி விளாத்திகுளம், மேலகரந்தையில் வசித்து வருகின்றனர்.

    80 வயதாகும் நம்மாள்வார் 60களில் கூலி வேலைக்காக ஆந்திராவின் நரசிப்பட்டினம் பகுதிக்கு சென்றிருக்கிறார்.

    அப்போது தான் கெளரியை சந்தித்து காதலித்துள்ளார். கௌரி வீட்டை விட்டு ஓடி வரும் போது அவரின் குடும்பத்தினர் விஜயவாடா பேருந்து நிலையத்தில் அவர்களை கண்டுபிடித்து விட்டனர்.

    பின் அவர்கள், இனி கௌரியை தொந்தரவு செய்யவோ, மீண்டும் நரசிப்பட்டினம் வரவோ கூடாது என்று நம்மாள்வரை மிரட்டி விட்டுச் சென்றிருக்கின்றனர்.

    இதன் பின் கெளரியை அழைத்து சென்றுள்ளார் நம்மாள்வர், 1966ம் ஆண்டு நம்மாள்வர் – கௌரி திருமணம் நடந்துள்ளது.

    அப்போது 16 வயதில் திருமணம் செய்துள்ளார்.

    7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்திவரும் நம்மாள்வருக்கு சண்முகராஜ், அய்யம்மாள், முத்துலட்சுமி என்ற பிள்ளைகள் உள்ளனர்.

    இந்த நிலையில், வயதான காலத்தில் கௌரி தனது குடும்பத்தினர்களை பார்க்க வேண்டும் என தனது மகன்களிடம் அழுது கேட்டுள்ளார்.

    இதனால், 49 வயதாகும் அவரின் மூத்தமகனான சண்முகராஜ் தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சின்னபாளையம் கிராமத்துக்கு சென்றுள்ளார்.

    அங்கே தனது தாய்வழி உறவினர்கள் குறித்து விசாரித்து அவர்களை கண்டிபிடித்துள்ளார்.

    ஆனாலும், இன்று வரை அக்கம் பக்கத்தினர்கள் தாயை பற்றி நியாபகம் வைத்திருந்துள்ளனர்.

    தொடர்ந்து, 56 ஆண்டுகள் கழித்து கௌரியின் குடும்பத்தினர் அவரை சந்தித்தனர்.

    Woman joins with family

    கௌரியின் சகோதரர்கள் மஜ்ஜி சோமுலு, மஜ்ஜி தாசு மற்றும் சகோதரிகள் மாமிடி வெங்கைம்மா, கெங்கம்மா ஆகியோர் இயற்கை எய்தியிருந்தனர்.

    மேலும், மங்கா, ராம்பாபு ஆகிய உடன்பிறந்தவர்கள் உயிருடன் இருந்தனர். அவர்களும் கௌரியைக் காண மேலகரந்தை வந்திருக்கின்றனர்.

    இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!