Connect with us

    பிறந்த நாள் அன்று கணவரை கொலை செய்த கொடூர மனைவி; நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

    Annalskshmi ranjith

    Viral News

    பிறந்த நாள் அன்று கணவரை கொலை செய்த கொடூர மனைவி; நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

    கேரள மாநிலம், இடுக்கி, கட்டப்பனைச் ரஞ்சித். இவரது மனைவி அன்னலட்சுமி. ரஞ்சித்துக்கு கடந்த 6ம் தேதி பிறந்தநாள்.

    Annalskshmi ranjith

    அன்று காவல் துறையினருக்கு கட்டப்பனை பகுதி மக்கள் போன் செய்து ரஞ்சித் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார் என்று தகவல் கொடுத்துள்ளனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்து கிடந்த ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது மனைவி அன்னலட்சுமி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அன்னலட்சுமி மீது சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து அன்னலட்சுமி கூறுகையில், தினமும் என் கணவர் குடித்துவிட்டு வீட்டு வருவார்.

    இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். குடித்துவிட்டு என்னை அடித்து துன்புறுத்துவார்.

    ரஞ்சித் பிறந்த நாள் அன்று குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அன்றைக்கும் என்னிடம் தகராறு செய்தார்.

    ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த நான், மரக்கட்டையால் ரஞ்சித்தின் தலையில் ஓங்கி அடித்தேன்.

    இதில், அவர் மயங்கி கீழே விழுந்தார். மயங்கி கிடந்தவரை ஒரு கொடியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

    பின்னர் உடலை வீட்டிற்கு பின்புறம் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்து விட்டேன் என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

    இக்கொலையை வழக்குப்பதிவு செய்த போலீசார் அன்னலட்சுமியிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குடிபோதையில் தொல்லை செய்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!