Connect with us

    முகநூல் காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலனின் கதையை முடித்த இளம்பெண்; எதற்காக தெரியுமா..??

    Swetha

    Tamil News

    முகநூல் காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலனின் கதையை முடித்த இளம்பெண்; எதற்காக தெரியுமா..??

    திருமணம் ஆன கர்ப்பிணி பெண் தனது முகநூல் காதலுடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Swetha

    ஐதராபாத் அமீர்பேட்டையை சேர்ந்தவர் இளம் பெண் ஸ்வேதா.

    இவர் பெங்களூவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கும் இவருடன் பணிபுரிந்த ஒருவருக்கும் கடந்த ஒருவருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

    இதனிடையே ஸ்வேதாவுக்கு புகைப்பட கலைஞரான அஸ்ம குமார் என்பவர் நண்பராக அறிமுகமானார்.

    அவருடன் கடந்த 24 ஆம் தேதி தனது கணவருக்கு தெரியாமல் ஸ்வேதா டேட்டிங் சென்றுள்ளார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் சுத்தியால் தாக்கியதில் அஸ்மகுமார் படுகாயமடைந்தார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 6 ஆம் தேதி அஸ்மகுமார் உயிரிழந்தார்.

    இந்த கொலை தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர், ஸ்வேதாவை விசாரித்தனர்.

    அவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போது அவர் தனது முகநூல் காதலனுடன் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது.

    விசாரணையில், சில மாதங்களுக்கு முன் ஸ்வேதாவை செல்போனில் தொடர்பு கொண்ட அஸ்மகுமார் ஆடையின்றி வீடியோ கால் வரும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

    காதலனின் கோரிக்கையை தவிர்க்க இயலாத ஸ்வேதா அதேபோல் செய்தார்.

    இதை பயன்படுத்திக்கொண்ட அஸ்மகுமார் கடந்த ஒரு மாதகாலமாக தன்னை திருமணம் செய்யும் படி வற்புறுத்திவந்துள்ளார்.

    தனக்கு திருமணம் ஆகிவிட்டது பற்றியும் மேலும், தாம் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளதாகவும் கூறி ஸ்வேதா தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் இரண்டு பேரும் தனியாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாச படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை உன்னுடைய நண்பர்கள், உறவினர்கள், கணவன் ஆகியோருக்கு அனுப்பி விடுவேன் என்று கூறி அஸ்மகுமார் சுவேதாவை மிரட்டி வந்தார்.

    அஸ்மகுமாரின் டார்ச்சர் உச்சம் பெற, தொல்லை தாங்க முடியாத ஸ்வேதா, அவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்.

    அதற்கு தனது முகநூல் காதலனான அசோக்கிடம் இதை பெற்றி கூறியுள்ளார்.

    இருவரும் அஸ்மகுமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

    அசோக் என்பவரை ஐதராபாத்தில் உள்ள பிரசாந்த் ஹில்ஸ் பகுதிக்கு ஸ்வேதா வரவழைத்தார்.

    அங்கு தன்னுடைய கொலை திட்டம் பற்றி அசோக்கிடம் ஸ்வேதா தெரிவித்தார்.

    இரண்டு பேரும் சேர்ந்து அஸ்மகுமாரை கொலை செய்வது என்று முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 24 ஆம் தேதி பிரசாந்த் ஹில்ஸ் பகுதிக்கு அஸ்மகுமாரை டேட்டிங் அழைத்து சென்ற ஸ்வேதா, தனது திட்டப்படி அங்கு முன்னதாக காத்திருந்த முகநூல் காதலன் அசோக்குடன் சேர்ந்தது கத்தியால் நான்கு முறை தலையில் தாக்கி கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொலைக்காக அசோக் தன்னுடைய நண்பரான கார்த்திக்கை உடன் சேர்த்துள்ளார்.

    இதையடுத்து ஸ்வேதா, அசோக், கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!