Viral News
ஐடி வேலையை விட்டு விட்டு விவசாயத்தை கையிலெடுத்து வருடத்திற்கு 1 கோடி சம்பாதித்து அசத்தும் இளம்பெண்..!!
ஏசி அறை, கணினித் திரை, லட்சத்தை எட்டும் மாதச் சம்பளம், வார இறுதி குதூகலங்கள் என ஒரு ஹைடெக் சிட்டியில் ஒய்யாரமாய் வாழ்ந்து களிக்காமல், தன் வேலையை உதறிவிட்டு விவசாயத்தை முழுநேரமாய் கையிலெடுத்து சாதித்து வருகிறார் இளம்பெண் ஒருவர்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா ரெட்டி(26) என்ற இளம்பெண், தனது ஐடி வேலை விட்டுவிட்டு, விவசாயம் செய்து வருகிறார்.
தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காய்கறிகள், பழங்களை பயிரிட்டு கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்.
ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை சாகுபடி செய்து, அவற்றை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்கிறார்.
ஆரம்பத்தில் தான் பணிபுரிந்து வந்த ஐடி வேலையை கைவிட்ட போது ஏராளமானோர் இவரை பரிகாசம் செய்தனர்.
இதுபோன்ற புதிய முயற்சிகளைக் கையிலெடுக்கும் பெரும்பாலானோர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை விமர்சனங்கள்.
இவர்களை ஊக்குவிப்பவர்களைக் காட்டிலும் எதிர்மறை விமர்சனங்களைப் முன்வைப்போர் அதிகமிருப்பார்கள்.
ரோஜா ரெட்டியும் இதே பிரச்சனையை எதிர்கொண்டார். நல்ல வேலையை யாராவது விடுவார்களா?
விவசாயத்தில் என்ன லாபம் கிடைத்து விடப்போகிறது? என்ன முட்டாள்தனமான முடிவு இது? என சுற்றியிருந்தவர்கள் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினார்கள்.
குடும்பத்தினரும் இதேபோன்ற எண்ண ஓட்டங்களையே கொண்டிருந்தனர்.
அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், ரோஜா ரெட்டி தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
தற்போது வெற்றிகரமான விவசாயியாக மாறியுள்ளார்.
