Tamil News
கள்ளக்காதலனுடன் தாய் ஓடியதால், அவமானத்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் கணவர் மற்றும் இரு மகன்கள்; நிலைகுலைந்து போன குடும்பம்..!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் அய்யப்பன். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி லலிதா (39). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் 22வயதான மூத்த மகன், இன்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
21 வயதான 2வது மகன் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
கணவர் வெளிநாட்டில், மகன்கள் வேலை, படிப்பு என்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த லலிதா பேஸ்புக் நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்நிலையில் அந்த வாலிபர் எத்தனை நாட்களுக்குத்தான் நாம் புகைப்படம் மூலமாக பேசிக்கொள்வது, நேரில் சந்திப்போம் என்று முடிவெடுத்து உள்ளனர்.
இதற்கு எந்தவித தயக்கமும் இன்றி பச்சைக் கொடி காட்டி உள்ளார் லலிதா.
இதனால் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து கடலூரில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்த வாலிபர் அங்கு தெரிந்த நபர் மூலம் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு ஓட்டி பிழைப்பும் நடத்தினார்.
ஆட்டோ ஓட்டிய நேரம் போக மற்ற சமயங்களில் லலிதாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதன் விளைவாக லலிதா 4 மாத கர்ப்பிணியானார்.
கள்ளக்காதலை மறைத்தாலும், கருவில் வளரும் குழந்தையை மறைக்க முடியாது என்று எண்ணிய லலிதா, அவருடன் குடும்பம் நடத்தவும் முடிவு செய்தார்.
இதனால், அரும்பாடுபட்டு உழைத்து கணவர் வாங்கி கொடுத்த வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளுடன் கடந்த 13ம் தேதி லலிதா, தனது கள்ளக்காதலனுடன் திடீர் மாயமானார்.
இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள தனது கணவர் அய்யப்பனுக்கு, லலிதா வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதில், கடலூரை சேர்ந்த 25 வயது வாலிபருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் காதலனுடன் லலிதா இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.
தன்னுடன் மாலையும் கழுத்துமாக இருக்க வேண்டிய மனைவி, மாற்றானுடன் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தையும், ஆடியோ பதிவையும் கேட்டு ஆடிப்போன அய்யப்பன் மனதை திடமாக்கிக் கொண்டார்.
தனது மகன்களை தொடர்பு கொண்டு இனிமேலும் அப்படியொரு அம்மா நமக்கு வேண்டாம். அவர் திரும்பி வந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று ஆறுதல் கூறியுள்ளார்.
தங்களது அம்மா வேறு ஒருவருடன் ஓடிப்போனதால் மூத்த மகன் வேலைக்கு செல்ல முடியாமலும், இளைய மகன் கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவமானத்தால் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
