Connect with us

    ஆசை கணவருக்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த மனைவி; ஆனால் வந்ததோ பவுடர் டப்பா..!!

    Online order cellphone

    Viral News

    ஆசை கணவருக்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த மனைவி; ஆனால் வந்ததோ பவுடர் டப்பா..!!

    கேரளாவில் தனது கணவருக்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு பவுடர் டப்பா டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Online order cellphone

    கேரள மாநிலம் இடுக்கி பகுதியை அடுத்துள்ள முண்டியேருமா கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சனா கிருஷ்ணா.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவருக்காக மொபைல் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.

    இந்த நிலையில், நேற்று அஞ்சனாவை தொடர்பு டெலிவரி பாய் ஒருவர், நீங்கள் ஆர்டர் செய்தது இன்று டெலிவரி வரும் என்று தெரிவித்தார்.

    பின்னர், டெலிவரி பாயும், அதனை ஆர்டர் பார்சலை அஞ்சனாவிடம் கொடுத்துவிட்டு அதற்காக ரூ.17,028 பணத்தையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து உடனே சென்றுவிட்டார்.

    இதையடுத்து பார்ஸலை வீட்டிற்குள் எடுத்து சென்ற அஞ்சனா, அதை திறந்து பார்த்துள்ளார்.

    அப்போது மொபைல் போனுக்கு பதிலாக பவுடர் டப்பாக்கள் இருந்துள்ளது தெரியவந்தது. அதுவும் காலாவதியான டப்பாக்கள் இருந்துள்ளது.

    இதனை கண்டதும் ஆத்திரப்பட்ட அஞ்சனா, உடனே தனது மொபைல் போனை எடுத்து ஆன்லைன் ஆப் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

    மேலும் இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்திலும், காவல்துறையிலும் புகார் அளித்தார்.

    பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல் அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது பார்சலில் வந்த மொபைல் போனுக்கு பதிலாக காலாவதியான பவுடர் டப்பா வைத்து டெலிவரி செய்தது அந்த டெலிவரி பாய் என்று தெரியவந்தது.

    பின்னர் டெலிவரி பாயை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது தனது தவறை ஒப்புக்கொண்ட அவர், இது போன்று ஏற்கனவே பல சம்பவங்கள் செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.18000 மதிப்புள்ள மொபைல் போனை ஆர்டர் செய்தவருக்கு ரூ.10,000 மதிப்புள்ள மொபைல் போனை மாற்றி வைத்து டெலிவரி செய்ததாக டெலிவரி பாய் தெரிவித்தார்.

    இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!