Connect with us

    சிறு சிறு துகள்களாக தங்கத்தை பர்தாவில் மறைத்து கடத்திய பெண்; விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம்; வைரல் வீடியோ உள்ளே

    Gold smuggling

    Uncategorized

    சிறு சிறு துகள்களாக தங்கத்தை பர்தாவில் மறைத்து கடத்திய பெண்; விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம்; வைரல் வீடியோ உள்ளே

    துபாயில் இருந்து, 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, சிறு துகள்களாக மாற்றி தன்னுடைய ‘பர்தா’வில் பொருத்தி கடத்திய பெண், சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார்.

    Gold smuggling

    இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    தெலுங்கானாவின் ஐதராபாத் விமான நிலையத்தில், சமீபத்தில் துபாயில் இருந்து வந்த ஒரு பெண் பயணியின் உடைமைகளை, சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது அந்த பெண் பயணி அணிந்திருந்த பர்தாவில் இருந்த வெண்ணிற மணிகள் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து, பர்தாவை கழற்றி அதிகாரிகள் பரிசோதித்தனர்.

    அப்போது, 18.18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை வெள்ளை மணிகளாக மாற்றி, பர்தாவில் இணைத்திருப்பது உறுதியானது.

    இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    பர்தாவில் இருந்து தங்க மணிகள் சேகரிக்கும், ‘வீடியோ’வையும் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!