Connect with us

    பெண் குழந்தை பெற்றதால், மனைவிக்கு சூடு வைத்த கொடூர கணவன்; பதை பதைக்க வைத்த சம்பவம்..!

    Woman tortured by husband

    Tamil News

    பெண் குழந்தை பெற்றதால், மனைவிக்கு சூடு வைத்த கொடூர கணவன்; பதை பதைக்க வைத்த சம்பவம்..!

    பெண் குழந்தை பெற்றெடுத்ததால் மனைவிக்கு கணவன் இரும்பு கம்பியால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Woman tortured by husband

    மத்தியபிரதேச மாநிலம் டேவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி (22 வயது).

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பப்லு ஜாலா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

    லெட்சுமி – பப்லு தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    தனக்கு பெண் குழந்தை பிறந்த பப்லுவுக்குவும் அவரின் குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை.

    இதனால், பப்லு தனது மனைவியை லெட்சுமியை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தாக்கியுள்ளார். மேலும் பப்லுவின் குடும்பத்தினரும் லெட்சுமியை தாக்கியுள்ளனர்.

    இந்நிலையில் லெட்சுமியின் பெற்றோர் தங்களது மகளை பார்ப்பதற்காக கடந்த மார்ச் 16-ம் தேதி பப்லு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    லெட்சுமியின் உடலில் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளனர்.

    லெட்சுமியின் கைகள், கால்களில் சூடு வைத்துள்ளனர். பல நாட்களாக லெட்சுமியை அடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து லெட்சுமியை மீட்ட அவரது உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லெட்சுமியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!