Connect with us

    மதம் மாறி காதலித்து திருமணம் செய்த இந்துப்பெண் பர்தா அணிய மறுத்ததால் குத்திக் கொலை..!

    Partha

    Viral News

    மதம் மாறி காதலித்து திருமணம் செய்த இந்துப்பெண் பர்தா அணிய மறுத்ததால் குத்திக் கொலை..!

    இஸ்லாமிய இளைஞரை காதலித்து திருமணம் செய்த இந்துப் பெண் திருமணத்திற்குப் பின் பர்தா அணிய மறுத்ததால் கணவனால் கொடூரமாக கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Partha

    மகாராஷ்டிர மாநிலம்
    மும்பையை சேர்ந்தவர் இக்பால் ஷேக் (36).

    இவர் ஒரு டாக்ஸி டிரைவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ரூபாலி (20) என்ற இந்துப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். திருமணத்துக்குப் பிறகு ரூபாலி தனது பெயரை சாரா என்று மாற்றிக்கொண்டார்.

    நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் திடீரென சச்சரவுகள் ஏற்பட்டது.

    இக்பால் வீட்டில் சாராவை பர்தா அணியும்படியும், முஸ்லிம் மத பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கும்படியும் நிர்ப்பந்தம் செய்தனர்.

    ஆனால் சாரா தன்னால் பர்தா அணியமுடியாது என்றும் முஸ்லிம் மத பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் கணவன் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக தன் மகனுடன் சாரா தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

    இந்நிலையில் விவாகரத்து செய்து கொள்வது குறித்து பேச வருமாறு இக்பால் தனது மனைவி சாராவை அழைத்தார்.

    இருவரும் இரவு 10 மணிக்கு சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது சாரா தனக்கு விவாகரத்து கொடுக்கும்படி கேட்டதாகத் தெரிகிறது.

    ஆனால் இக்பால் சாராவை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார்.

    மேலும், குழந்தையை யார் வைத்துக்கொள்வது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதோடு பர்தா அணிவது குறித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த இக்பால் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் சாராவின் கழுத்தை அறுத்தார். இதில் சம்பவ இடத்திலேயே சாரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் வழக்கு பதிவுசெய்து இக்பாலை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!