Viral News
மருமகளை தனது இளைய மகன்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய மாமியார்; கோபத்தில் மருமகள் செய்த தரமான சம்பவம்..!
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் தனது மருமகளை தனது இளைய மகன்களுடன் உல்லாசமாக இருக்க மாமியார் வற்புறுத்தி கொடுமைப்படுத்திய அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் சிட்டி கொட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டோங்ரா சாலையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த பெண் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்துள்ளார்.
அதில் தனக்கும் தனது தாய் மாமனுக்கும் இடையே கடந்த 2021 ஆம் ஆண்டில் இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்தது முதல் தனது மாமியார் அதிக அளவில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்.
கேட்கும் போதெல்லாம் தனது தந்தை ஆயிரக்கணக்கில் பணத்தை கொடுத்து வந்ததாகவும், ஆனாலும் தொடர்ந்து மாமியார் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார்.
ஒரு கட்டத்தில் தனது வங்கிக் கணக்கில் இரண்டு லட்சம் ரூபாய் இருந்ததை அறிந்த மாமியார் தனக்கு 5 லட்சம் தேவைப்படுகிறது என கூறினார்.
அதே நேரத்தில் கூட்டுக் குடும்பத்தில் தான் வசித்ததால் தனது மாமியார் திருமணமாகாத தனது இரண்டு மைத்துனர்களுடனும் தன்னை உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு தன்னை வற்புறுத்தி வந்ததாகவும், அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் தனது மைத்துனர்களும் தன்னுடன் உறவு கொள்ள விரும்புகின்றனர் என் அந்த பெண் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து மாமியாரிடம் புகார் அளித்தும் எனது மாமியார் மௌனம் காத்து வருகிறார்.
தான் இரண்டு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் மைத்துனர் தனது வயிற்றில் எட்டி உதைத்து அதனால் கர்ப்பம் கலைந்துவிட்டது என அந்த பெண் அதில் குற்றம் சாட்டியுள்ளார். மைத்துனர்கள்
மதுவுக்கு அடிமையானதால் அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை.
எனவே மது உட்கொண்டு தினம் தன்னை துன்புறுத்தி வருகின்றனர்.
இது குறித்து கணவரிடம் புகார் அளித்தும் அவர் தனது தாயுடன் சேர்ந்து என்னை தாக்கினார்.
இவ்வாறு அந்தப் பெண் கண்ணீர் மல்க தனது புகாரில் கூறியுள்ளார்.
