Viral News
வடிவேலு பட பாணியில் 3-வது கணவருடன் ஓடிய மனைவி; கண்டுபிடித்து தங்களுடன் சேர்த்து வைக்குமாறு முதல் இரண்டு கணவர்கள் போலீசில் கதறல்…!
3-வது கணவருடன் ஓடிய தங்களது மனைவியை சேர்த்து வைக்க கோரி இரண்டு பேர் போலீசாரிடம் புகார் அளித்து உள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் வடிவேலு காமெடியில் ஒரு பெண்ணை தங்களது மனைவி என நான்கு பேர் உரிமை கொண்டாடும் காட்சி வரும்.
அதே போன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பரோசா சிறைச்சாலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சில தினங்களுக்கு முன் கதறி அழுதபடி வந்த இருவர் புகார் ஒன்றை அளித்தனர்.
அந்த புகாரில் தங்களது மனைவி எங்கள் இருவரை விட்டு விட்டு மூன்றாவதாக வேறு ஒருவருடன் ஊரை விட்டு ஓடி விட்டார்.
அவரை கண்டுபிடித்து தங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கோரினர்.
இதனால் பரோசா சிறை போலீசார் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:
புகாரில் கூறப்பட்டுள்ள அந்தப் பெண் தனது முதல் கணவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2020-ன் நடுப்பகுதியில் அந்தப் பெண், இரண்டாவதாக ஒருவருடன் நட்பு கொண்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஜோடியாக வாழ ஆரம்பித்தனர்.
இவருடன் சுகபோகமாக அந்த பெண் வாழ்ந்து வந்த நிலையில், எந்நேரமும் சமூக வலைத்தளத்தில் அடிமையாகி, அதிலேயே எந்நேரமும் மூழ்கிக் கிடந்து உள்ளார்.
இந்நிலையில், சமூக வலைத்தளம் மூலமாக ஒரு இளைஞர் இந்த பெண்ணுக்கு அறிமுகம் ஆன நிலையில், அவருடன் இந்த பெண் தினமும் அதிக நேரம் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இதனால், அந்த இளைஞனுடன் இந்த பெண்ணுக்கு நெருக்கம் அதிகரித்த நிலையில், தனது இரு கணவர்களையும் மறந்து, 3 வதாக அந்த ஆன்லைன் காதலனுடன் சென்றுள்ளார்.
இதனால், அவரது இரண்டாவது கணவர் அந்த பெண்ணை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனாலும், கண்டுபிடிக்க முடியவில்லை.
சமூக ஊடகங்கள் மூலம் அவர் மூன்றாவதாக ஒருவரை காதலித்து வந்த விபரம் அப்போது தெரிய வந்துள்ளது.
தற்போது அந்தப் பெண் அந்த 3 வது நபருடன் குடும்பம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தங்கள் மனைவியை கண்டுபிடித்து தருமாறு முதல் இரண்டு கணவர்கள் பரோசா போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.
வழக்கின் விபரங்களைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்ற போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து, 2 கணவர்களை விட்டு 3 வதாக ஆன்லைன் காதலனுடன் சென்ற அந்த பெண்ணை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
