Connect with us

    கால் சிலம்பை கையில் ஏந்தி கண்ணகி வேடத்தில் மனுத்தாக்கல் செய்த இளம்பெண்; ஏன் தெரியுமா..???

    கண்ணகி போன்று கால் சிலம்பை கையில் ஏந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்த மதுமிதா

    Politics

    கால் சிலம்பை கையில் ஏந்தி கண்ணகி வேடத்தில் மனுத்தாக்கல் செய்த இளம்பெண்; ஏன் தெரியுமா..???

    மதுரை மாநகராட்சி 78-வது வார்டில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த பெண் வேட்பாளர் மதுமிதா கண்ணகி போன்று கால் சிலம்பை ஏந்தி வந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கண்ணகி போன்று கால் சிலம்பை கையில் ஏந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்த மதுமிதா

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இதனிடையே நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    அதிமுக, பாமக, பாஜக, அமமுக, தேமுதிக, மநீம மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குகின்றன.

    அரசியல் பின்புலம் இருந்தாலும் வார்டுகளில் சொந்த செல்வாக்கு உள்ள வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு இருக்கும்.

    கடந்த ஜனவரி.28-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவு பெற்றது.

    வேட்பாளர்கள் பலர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல கெட்டப்புகளில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

    அந்த வகையில் மதுரை மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் எம்பிஏ பட்டதாரி மதுமிதா கால் சிலம்புடன் கண்ணகி தோற்றத்தில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    மதுரை மாநகராட்சி 78-வது வார்டில் போட்டியிடும் இவர் போட்டியிடுகிறார்.

    செய்யாத தவறுக்காக கோவலன் தண்டிக்கப்பட்டதற்கு கண்ணகி நீதி கேட்டதை நினைவுபடுத்தி, ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு நீதி கேட்கும் வகையில் கால் சிலம்பை கையில் ஏந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!