Tamil News
காதலித்து, தன்னிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு, ஆட்டோ ஓட்டுனர் தன்னை ஏமாற்றி விட்டதாக விஷம் குடித்த இளம்பெண்…!!
காதலித்து ஆட்டோ ஓட்டுனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெண் ஒருவர் விஷமருந்திய நிலையில் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த பெரியமுத்து என்பவரது மகள் செல்வமணி (25).
இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஆலங்குளத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரும் அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ் (27) என்பவரும் பள்ளியில் படிக்கும் போதே சுமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
செல்போனில் தங்கள் காதலை பல ஆண்டுகளாக வளர்த்து வந்த நிலையில், இருவரும் கடந்த 6 மாதங்களாக கணவன், மனைவி போல் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாகவும் தெரிகிறது.
இவர்கள் இருவரும் தனிமையில் இருந்த போது செல்வமணியின் உறவினர் நேரில் பார்த்து இவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இது சம்பந்தமாக கடந்த 03-11- 2021 அன்று ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் செல்வமணி தரப்பில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சதீஷ் செல்வமணியை பார்த்து இவர் யார் என்று தெரியாது என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வமணி தாங்கள் காதலித்த போது, இருவரும் நெருக்கமாக இருந்த ஆதாரங்களை எடுத்து சென்று, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், தனக்கு நியாயம் கேட்டு சதீஷ் வீட்டுக்கு நேரடியாகச் சென்றுள்ளார்.
அங்கு சதீஷின் உறவினர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
வீட்டு முன்பு செல்வமணி தர்ணாவிலும் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் தனக்கு நியாயம் கிடைக்காது என்று எண்ணி, விஷம் அருந்திய செல்வமணி, தனது வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் சதீஷ் மீது தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஷம் அருந்திய செல்வமணிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
