Cinema
தீபாவளியன்று இரண்டாவது குழந்தைக்கு தந்தையான நடிகர் யோகிபாபு; குவியும் வாழ்த்துக்கள்..!
நகைச்சுவை நடிகர் யோகிபாபு இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த வடிவேலு மற்றும் சந்தானம் இருவருமே ஹீரோவாக நடிக்கத் துவங்கிய பின்பு, சிறந்த காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்க பலர் போட்டி போட்ட நிலையில் இந்த இடத்தை நிரம்பியவர் காமெடி நடிகர் யோகி பாபு தான்.
மேலும் ரஜினி, அஜித், விஜய், என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் எந்தவிதமான காமெடி காட்சியாக இருந்தாலும் அதில் இறங்கி நடித்து அசத்துகிறார் யோகி பாபு.
தற்போது இவரின் கைவசம் எக்கச்சக்கமான படங்கள் உள்ளது.
இந்த நிலையில் இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பருடன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் கோவிலில் நடைபெற்றது. நடிகர் யோகி பாபு கடந்த ஆண்டு ஆண் குழந்தைக்கு தந்தையானார்.
இந்நிலையில், தீபாவளி ஆனநேற்று இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ளார் யோகி பாபு.
ஆம், நேற்று யோகி பாபு – மஞ்சு தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
