Tamil News
வேலை தேடி வரும் பெண்களை குறிவைத்து இளம்தம்பதி செய்த மோசமான வேலை…!
சென்னையை அடுத்த திருவொற்றியூர் அப்பர் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சரளா.
இந்த தம்பதிகள் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸார் தனிப்படை அமைத்து விசாணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
மேலும் இவர்கள் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் இரண்டு பெண்களை வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.
இந்த தம்பதி, வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலை தேடிவரும் பெண்களைக் குறிவைத்து தனியார் நிறுவனங்களில் வேலை வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறி, பின்னர் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
இந்த தம்பதியிடம் இருந்த இரண்டு பெண்களையும் போலீஸார் மீட்டு அரசு காப்பக்காத்தில் தங்கவைத்துள்ளனர். அவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் தம்பதிகளை கைது செய்து இவர்களிடம் இருந்த மூன்று செல்போன்களையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலை தேடிவரும் வெளியூர் பெண்களை குறிவைத்து தம்பதியினர், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
