Connect with us

    வீட்டு ஓனரிடம் ரூ 12 லட்சம் ஆட்டைய போட்டு, காதலனுடன் ஜாலியாக டூர் சென்று உல்லாசமாக இருந்த இளம்பெண்..!!

    College girl with boy friend

    Tamil News

    வீட்டு ஓனரிடம் ரூ 12 லட்சம் ஆட்டைய போட்டு, காதலனுடன் ஜாலியாக டூர் சென்று உல்லாசமாக இருந்த இளம்பெண்..!!

    மத்திய அரசு ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 12 லட்சம் திருடிய வேலைக்கார பெண்ணை அரும்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    College girl with boy friend

    சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின்.

    இவர் பி.எஸ்.என்.எல் டெலிகாம் டெக்னீஷியனாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார்.

    இவரது மகன் அகஸ்டின் (58). இவரது மனைவி ஷீலா (53)

    தந்தையின் முதுமை காரணமாக, அவரை கவனித்துக்கொள்ள அரும்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த 50 வயதான வளர்மதி என்பவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

    இவர் கடந்த 15 வருடங்களாக அகஸ்டின் வீட்டில் வேலை செய்து வருகிறார்.

    வளர்மதிக்கு 19 வயது சுமித்ரா என்ற பெண் உள்ளது.

    இந்தநிலையில், கடந்த 3ம் தேதி வீடு கட்டுவதற்காக சாலிகிராமத்தில் உள்ள தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க அகஸ்டின் சென்றார்

    அப்போது கடந்த 2011 முதல் 2022 வரை அவரது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 11.90 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக வங்கி ஊழியர் தெரிவித்து, அதற்கான ஆவணத்தையும் அளித்துள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த அகஸ்டின் இதுதொடர்பாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அந்தப் புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோலிஸார், தொடர்ந்து நடத்திய விசாரணையில், அகஸ்டின் வீட்டில் 15 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்க்கும் வளர்மதி என்பவரின் மகள் சுமித்ராவுக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பதை போலிஸார் கண்டுபிடித்தனர்.

    மேலும் அகஸ்டின் மற்றும் அவரது மனைவிக்கு செல்போன் பற்றி போதிய அளவில் விவரங்கள் தெரியாததை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுமித்ரா, தனது ஆண் நண்பர் சதீஷ்குமாருக்கு, அகஸ்டின் செல்போன் மூலம் பணம் அனுப்பியுள்ளார்.

    இதனிடையே சதீஷ்குமாருடன் சுற்றுலா சென்ற வளர்மதியை போலிஸார் சென்னை வரவழைத்து கைது செய்தனர்.

    அவர்களிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டு ஓனரிடமே லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!