Connect with us

    71 வயது முதியவருடன் நள்ளிரவில் உல்லாசமாக இருந்த பெண்; அப்போது செய்த பகீர் செயல்..!!

    Raji

    Tamil News

    71 வயது முதியவருடன் நள்ளிரவில் உல்லாசமாக இருந்த பெண்; அப்போது செய்த பகீர் செயல்..!!

    71 வயது முதியவருடன் பழகி தனிமையில் இருக்கும் போது புகைப்படங்களை எடுத்து அதனை வெளியிட்டு விடுவேன் என கூறி ரூ.50 லட்சம்கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Raji

    கேரளா மாநிலம் திரிச்சூரில் , எருமபட்டி – திப்பிலசேரி பகுதியை சேர்ந்தவர் ராஜி(35). இவர் குந்நங்குளம் என்ற பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.

    இவருடைய ஆண் நண்பர் மூலமாக சாவக்காடு பகுதியை சார்ந்த 71 வயது வசதியான முதியவர் ஒருவருடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது

    கடந்த  20 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து நல்ல வசதியுடன் வாழ்ந்து வருவதை அறிந்த ராஜி அந்த முதியவருடன் நெருக்கமாக பழகியுள்ளார்.

    இதனையடுத்து உல்லாசமாக இருக்கலாம் வாருங்கள் என அந்த முதியவரை ராஜி அழைத்துள்ளார்.

    இதனை ஏற்று அந்த முதியவரும் ராஜியுடன் பியூட்டி பார்லர் அறை ஒன்றில் தனிமையாக இருந்து உள்ளார்.

    அப்போது அந்த முதியவருடன் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் போது தனது செல்போன்களில் புகைப்படம் எடுத்துள்ளார்.

    இதனையடுத்து இந்த நிர்வாண புகைப்படங்களை உறவினர்களிடம் காட்டி விடுவேன் என்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி ரூ.50 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.

    தொடர்ந்து அந்த முதியவரிடமிருந்து ராஜி ரூ.3 லட்சம் வரை மிரட்டி பறித்ததாகவும் கூறப்படுகிறது.

    ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த முதியவர் இது தொடர்பாக குந்நங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ராஜியை கைது செய்தனர்.

    தொடர்ந்து இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதியவருடன் பழகி ஆண் நண்பருடன் சேர்ந்து பணம் பறிக்க முயன்றதாக தெரியவந்துள்ளது.

    இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜியின் ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!