Connect with us

    சர்ச்-க்கு சென்ற பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு ஃபாதராக மாறிய இளைஞர்; திருமணம் செய்ய மறுப்பு; கதறும் இளம்பெண்…!!

    Pregnant lady

    Tamil News

    சர்ச்-க்கு சென்ற பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு ஃபாதராக மாறிய இளைஞர்; திருமணம் செய்ய மறுப்பு; கதறும் இளம்பெண்…!!

    ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் சர்ச் பாதிரியார் மீது கொடுத்த பாலியல் புகார் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    Pregnant lady

    அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

    நான் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து வருகிறேன்.

    சில ஆண்டுகளுக்கு முன் நான் காஞ்சி கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்று வருவேன்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆண் ஒருவருடன் எனக்கு நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் ஒரு நாள் படுத்த படுக்கையாக இருக்கும் தனது தாயாருக்கு தனது வீட்டிற்கு வந்து கவனிப்பீர்களா என்று கேட்டார்.

    உடனே நானும் சம்மதித்து கடந்த 2017-ம் ஆண்டு அவர் வீட்டுக்கு சென்று அவரது தாயை கவனித்து கொண்டேன்.

    அவர் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அவர் என்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதனால் நான் கர்ப்பமடைந்தேன்.

    தான் கர்ப்பம் அடைந்த விபரத்தை அவரிடம் கூறியதற்கு, என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

    இதை நானும் நம்பினேன். அதன்பின்னர் அவர் என்னை சேலம் அழைத்து சென்று கர்ப்பத்தை கலைக்க வைத்தார்.

    அதன்பிறகு என்னை திருமணம் செய்து கொள்ள அவரை வற்புறுத்தினேன்.

    அதற்கு அவர் நான் வேதம் படித்து விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு மகாராஷ்டிரா மாநிலம் சென்றுவிட்டார்.

    தற்போது அவர் மதபோதகராக திரும்பி வந்துள்ளார். அவரிடம் சென்று என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றேன்.

    அதற்கு அவர் இப்போது நான் மதபோதகர். உன்னை திருமணம் செய்ய முடியாது என்று மறுக்கிறார்.

    அதனால் அவர் மீதும், கர்ப்பத்தை கலைக்க உதவிய அவருடைய தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவின் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!