Viral News
57 வயது பிரான்ஸ் முதியவரை மணந்த 41 வயது பெண்; வைரலாகும் வீடியோ..!!
புதுச்சேரியில் 41 வயது இளம்பெண் 57 வயது முதியவர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மாநிலம், மணக்குள விநாயகர் ஆலயத்தில் முதியவர் ஒருவரை இளம்பெண் திருமணம் செய்துள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு வயது 41, முதியவருக்கு வயது 57 என்றும் கூறப்படுகிறது.
புதுச்சேரியை சார்ந்த பாஸ்கல் என்பவர் தனது நண்பர்களுடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.
57 வயதான அவர் தனது உறவினரான கணவரை இழந்த 41 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து கணவனை இழந்த 41 வயது பெண், புதுச்சேரியில் அவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், இந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த திருமண வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாஸ்கல் மற்றும் அந்தப் பெண்ணும் திருமணம் செய்து வாழும் எண்ணத்தோடு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி வந்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பிரான்ஸ் செல்ல முடியாததால் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டு பிரான்ஸ் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனைப் பார்த்த 90ஸ் கிட்ஸ் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில், இதேப்போல் பாகிஸ்தானில் 18 வயது முஸ்கான் என்ற இளம்பெண் 55 வயதான பரூக் அகமது முஸ்கான் என்பவரை இணையத்தில் பழக்கமாகி திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதெல்லாம் இதுபோன்ற திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருவதே வாடிக்கையாக உள்ளது.
