Uncategorized
கொரோனாவில் கணவர் இறந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற நண்பரின் மனைவியை காப்பாற்றி திருமணம் செய்த இளைஞர்; குவியும் பாராட்டுக்கள்..!!
கொரோனாவால் ( Corona) இறந்த நண்பரின் மனைவியை வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள முள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன்குமார் (வயது 41). இவருக்கும் ஹனூர் டவுனை சேர்ந்த அம்பிகாவுக்கும் (வயது 30) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது.
சேத்தன் குமார் பெங்களூருவில் உள்ள தனியார் ம்ருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கொரோனா 2-வது அலையின் போது சேத்தன்குமார் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதனால் அம்பிகா மிகவும் மனம் உடைத்து காணப்பட்டார்.
நாட்கள் செல்ல செல்ல கடும் மன உளைச்சலுக்கு ஆளான கணவனை இழந்த அம்பிகா, ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் சேத்தன் குமாரின் நண்பர் லோகேஷ், ஆகியோர் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற அம்பிகாவை காப்பாற்றி உள்ளனர்.
இதனால், அவர் உயிர் பிழைத்த நிலையில், அடுத்த சில நாட்களில் உயிரிழந்த சேத்தன் குமாரின் நண்பன் லோகேஷ், நண்பனின் மனைவியான அம்பிகாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளார்
இதற்கு அம்பிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதுபற்றி அவர்கள் தங்களது வீட்டினரிடம் தெரிவித்தனர். அவர்களும் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 27-ந் தேதி அம்பிகாவுக்கும், லோகேசுக்கும் பெங்களூருவில் திருமணம் நடந்தது.
கொரோனாவுக்கு பலியான நண்பரின் மனைவியை மறுமணமாக திருமணம் செய்த லோகேசின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
