Connect with us

    சென்னையில் பிரபல ஓட்டலில் பல்லி விழுந்த மட்டன் பிரியாணியை சாப்பிட்டவருக்கு நேர்ந்த சோகம்…!!

    பல்லி விழுந்த பிரியாணி சாப்பிட்ட இளைஞர்

    Uncategorized

    சென்னையில் பிரபல ஓட்டலில் பல்லி விழுந்த மட்டன் பிரியாணியை சாப்பிட்டவருக்கு நேர்ந்த சோகம்…!!

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் பல்லி விழுந்த மட்டன் பிரியாணியை சாப்பிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பல்லி விழுந்த பிரியாணி சாப்பிட்ட இளைஞர்

    பல வகையான உணவுகள் இருந்தாலும் பிரியாணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

    பிரியாணியின் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்த அளவுக்கு பிரியாணி மோகம் உணவு பிரியர்களை கட்டிப் போட்டுள்ளது.

    பிரியாணியில் சிக்கன், மட்டன், இறால் என பல வகையான பிரியாணி உள்ளது.

    அதிலும் பாசுமதி அரிசி பிரியாணி, சீரக சம்பா பிரியாணியை அதிகமானோர் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் அப்பாஸ் என்பவர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பல்லி செத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

    சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

    மதியம் ஒரு வேலையாக புரசைவாக்கம் வந்தேன். அங்கு பிரபல ஓட்டல் ஒன்றில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்தேன்.

    அப்போது பிரியாணியில் பல்லி ஒன்று செத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

    சாப்பிட்ட சிறிது நேரத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனேன்.

    ஆனாலும், வயிறு வலி தொடர்ந்து இருந்து வருகிறது. என் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அந்த ஓட்டல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!