Tamil News
தோழியின் தாய் குளிக்கும் போது, மறைந்திருந்திருந்து வீடியோ எடுத்த இளைஞர்; அதிர்ச்சியில் தோழி செய்த செயல்…!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தோழியின் தாயார் குளிப்பதை வீடியோ எடுத்து, ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிபவர் இளம்பெண்.
இவரும், நாகர்கோவில் டெரிக் சந்திப்பை சேர்ந்த பார்த்திபன் (22) என்பவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இதனால், பார்த்திபன் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
தோழியின் குடும்பமும் பார்த்திபனை வீட்டில் ஒருவராக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஒருநாள் தோழியின் வீட்டுக்கு வந்த பார்த்திபன் தோழியின் தாய் பாத்ரூமில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை அவரிடம் காட்டி, எனக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடு என்றும் பணம் கொடுக்காவிட்டால் வீடியோ முகநூலில் கசிந்துவிடும் என கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் பேரதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பார்த்திபனை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையின்போது பார்த்திபனின் செல்போன் மற்றும் லேப்டாப்பை ஆய்வு செய்தனர். அதில், தோழியின் தாய் குளிப்பதை பார்த்திபன் வீடியோ எடுத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
உடனே அவரை கைது செய்த போலீசார், இதுபோன்ற செயல்களில் பார்த்திபன் ஏற்கனவே ஈடுபட்டுள்ளாரா என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
