Connect with us

    குழந்தை பருவத்தில் தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே, டாக்டர் ஆகி அசத்திய இளைஞர்; குவியும் பாராட்டுக்கள்…!!

    Viral News

    குழந்தை பருவத்தில் தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே, டாக்டர் ஆகி அசத்திய இளைஞர்; குவியும் பாராட்டுக்கள்…!!

    இந்தியாவிலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தை ஒன்று வளர்ந்து, டாக்டருக்கு படித்து, தான் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையிலேயே டாக்டராகி சாதனை புரிந்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் கந்தசாமி. கடந்த 1998-ம் ஆண்டு இவர் 20 மாதக் குழந்தையாக இருந்தபோது, கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது.

    இதையடுத்து, சஞ்சய் கந்தசாமியின் தந்தையிடம் இருந்து 20 சதவீதம் கல்லீரல் பெற்று கல்லீரல் மாற்று ஆபரேசன் செய்யப்பட்டது.

    இந்தியாவிலேயே முதல் முறையாக கல்லீரல் மாற்று ஆப்ரேசன் வெற்றிகரமான முதல் குழந்தை சஞ்சய் கந்தசாமி தான்.

    இந்த ஆப்ரேசன்
    டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் செய்யப்பட்டது.

    தற்போது சஞ்சய் கந்தசாமி மருத்துவப் படிப்பு முடித்து, தனக்கு எந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மறுபிறப்பு அளிக்கப்பட்டதோ, அதே மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் மருத்துவராகப் பணியாற்ற உள்ளார்.

    இதுகுறித்து மருத்துவர் சஞ்சய் கந்தசாமி கூறுகையில் எனக்கு சிறுவயதில் இருந்தே டாக்டராகணும்னு ஆசை.

    நான் இன்று உயிரோடு இருப்பதற்கும், உயிர் வாழ்வதற்கும் எனக்கு ஆபரேசன் செய்த மருத்துவர்கள் தான் காரணம்.

    எனவே நானும் டாக்டராகி பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தேன்.

    அதனால் தான் என் லட்சியத்தை அடைய மிகவும் கவனமுடன் படித்து இன்று மருத்துவராகி உள்ளேன் கூறினார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!