Sports News
ஆப்பிரிக்க வீரரின் சவாலை முறியடித்த தமிழக இளைஞர்; கை தட்டி வாழ்த்து தெரிவித்த பார்வையாளர்கள்..!
நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்க கலைஞரின் சவாலுக்கு பதில் கொடுக்கும் வகையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த சில நாட்களாக ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது.
இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்க்கஸ் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த சர்க்கஸ் கலைஞர் ஒருவர் அதிக கனம் கொண்ட 80 கிலோ வடிவிலான பெரிய இரும்பு உருண்டையை ஒற்றைக் கையால் தூக்கி சாதனை செய்தார்.
அவர் சாகசம் செய்தபோது அந்த பெரிய இரும்பு உருண்டையை கையில் வைத்தபடி மற்றொரு கையில் மைக்கை கொண்டு யாரேனும் முடிந்தால் இந்த 80 கிலோ இரும்பு உருண்டையைத் தூக்கி காட்டுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
இதைக்கேட்ட மக்கள் அனைவரும் குமரியில் மானம் கப்பலேறி விடும் என்ற பயத்தில் இருந்தனர்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் மேடைக்கு சென்று 80 கிலோ எடை கொண்ட ஒரு உருண்டையை தலைக்குமேல் தூக்கி சாதனை படைத்தார்.
அந்த ஆப்பிரிக்கக் கலைஞர் சவாலுக்கு பதிலடி கொடுத்தார்.
இதைப்பார்த்த அனைவரும் கைதட்டி கோசங்களை எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் சர்க்கஸ் நிகழ்ச்சி முடியும் நாளில் மீண்டும் இதே சாதனையை செய்யப் போவதாக அவர் கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
