Connect with us

    பட்டு வேட்டி பட்டு சட்டையுடன், மணமகள் தேவை என பஸ் ஸ்டாண்டில் கோரிக்கை வைத்த இளைஞர்கள்; ஏன் தெரியுமா..??

    Youth campaigns

    Tamil News

    பட்டு வேட்டி பட்டு சட்டையுடன், மணமகள் தேவை என பஸ் ஸ்டாண்டில் கோரிக்கை வைத்த இளைஞர்கள்; ஏன் தெரியுமா..??

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இருவர், வரதட்சணை ஒழிப்பு தொடர்பாக நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

    Youth campaigns

    பட்டு வேட்டி சட்டை அணிந்து, மணக்கோலத்தில், வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த இளைஞர்களை, பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் உள்ள வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஷ் மோன். இவர் எம்.எஸ்சி., பி.எட் பட்டதாரி.

    இவரது நண்பர் சுனிஷ். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரி ஆவார்.

    இவர்கள் இருவரும் நாகர்கோவில் நகரின் முக்கியப் பகுதிகளிலும், வடசேரி பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்திலும் திருமண மாப்பிள்ளை போல் பட்டுச்சட்டை, வேட்டி உடன் கையில் மணப்பெண் தேவை என்னும் பதாகையுடன் நிற்கின்றனர்.

    அதில், தங்களுக்கு வரதட்சணையாக கார், பணம், தங்கம் எதுவும் தேவை இல்லை. மேலும், திருமணத்திற்கு சாதி, மதம் தேவையில்லை எனவும் எழுதியிருக்கிறது.

    இந்தப் பதாகையை வைத்துக் கொண்டு இவர்கள், பேருந்து நிலையத்திற்கு வந்த கல்லூரி மாணவர்களிடம் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

    இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து இளைஞர்கள் கூறும்போது:

    கை நிறைய சம்பாதிக்கும் பொறியியல் பட்டதாரியான தாங்கள், வரதட்சணை ஒழிப்பு குறித்து பிரச்சாரம் செய்தால், சிலர் கேலி கிண்டல் செய்கின்றனர்.

    இதனால், வித்தியாசமான முறையில், மணமகன் கோலத்தில், பொதுமக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் நூதனமுறையில் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தனர்.

    தங்களின் இந்த வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தூண்டுகோலாக அமையும் என்றும் அந்த இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்

    விநோதமான இந்த இளைஞர்களின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!