Tamil News
பாத்ரூமில் சிறிய துளை போட்டு இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்; அதிர்ச்சியில் பெண் செய்த காரியம்..!!
புதுச்சேரியில் பெண் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மாரிலம் உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தினகரன்(24).
இவரது பக்கத்து வீட்டில் 42 வயது பெண் வசித்து வருகிறார்.
அந்தப் பெண் அவரது குளியலறையில் குளிக்க போவதை தினகரன் அடிக்கடி நோட்டமிட்டுள்ளார்.
அதனால் அந்தப் பெண் குளிப்பதை படம் எடுக்க அவர் சதித்திட்டம் தீட்டினார்.
அதற்கு ஏற்றார் போல அவரது வீட்டு பாத்ரூம் சுவரில் அவருக்குத் தெரியாமல் ஓட்டை ஒன்றை போட்டு வைத்துள்ளார்.
பின்னர் வெகு நாட்களாக அந்தப் பெண் குளிக்கும் நேரத்தில் ஒளிந்துகொண்டு அந்த ஓட்டை வழியாக இந்த காட்சியை செல்போன் மூலம் படம் பிடித்து ரசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம் போல சில தினங்களுக்கு முன் அப்பெண் குளிப்பதை தனது செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார்.
இதனை அறிந்த அப்பெண் உடனடியாக குளியலறையில் இருந்து வெளியேறி உடனடியாக வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
மேலும் இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தினகரனை கைது செய்தனர்.
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
