Connect with us

    வேறு ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி 100 க்கும் மேற்பட்ட பெண்களிடம் சாட்டிங், ஆபாச பேச்சு, உல்லாச வாழ்க்கை நடத்திய திருமணம் ஆன இளைஞர்..!

    Arani bias

    Tamil News

    வேறு ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி 100 க்கும் மேற்பட்ட பெண்களிடம் சாட்டிங், ஆபாச பேச்சு, உல்லாச வாழ்க்கை நடத்திய திருமணம் ஆன இளைஞர்..!

    இன்ஸ்டாகிராமில் வேறு ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி 100 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீசி பல லட்சம் ரூபாய் பறித்த மோசடி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    Arani bias

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 23).

    ஆரணி டவுனைச் சேர்ந்தவர் பயாஸ், 24; திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜியுடன் பேஸ்புக் மூலம் பயாஸ் அறிமுகமாகியுள்ளார்.

    தொடர்ந்து பயாஸ் சாட் செய்தபோது, பாலாஜியின் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் உள்ள போட்டோக்களை பதிவிறக்கம் செய்துள்ளார்.

    பாலாஜி அழகாக இருந்ததால், அவரின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தான் பாலாஜி என்று அறிமுகமாகி, பல பெண்களுக்கு பிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து, பிரண்டாகியுள்ளார். அந்த

    தொடர்ந்து பாலாஜி போலவே பல பெண்களுடன் சாட்டிங் செய்து வந்துள்ளார்.

    சமூக வலைதளங்களில் பாலாஜியின் நண்பர் அதனை பார்த்துவிட்டு பாலாஜியிடம் தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து சமூக வலைதளத்தை பயன்படுத்தும் உண்மையான நபர் யார் என விசாரித்தனர்.

    பாலாஜியின் புகைப்படத்தை பயன்படுத்துவது ஆரணி சபாஷ் தெருவைச் சேர்ந்த பயாஸ் என்பது உறுதி செய்யப்பட்டது.

    திருப்பூரில் பணியாற்றி வந்த பயாஸ், கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான ஆரணிக்கு வந்துள்ளார்.

    இதையறிந்த பாலாஜி நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் அவரது வீட்டிற்குச் சென்று பயாசின் செல்போனை வாங்கி பார்த்துள்ளார்.

    அப்போது, வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயாஸ் புதிய கணக்குகள் தொடங்கியுள்ளது தெரிய வந்தது.

    அதில் பாலாஜியின் போட்டோவை வைத்து பல பெண்களுடன் ஆபாசமாக சாட்டிங் செய்து பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டிருப்பதும் தெரியவந்தது.

    என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி நீ பல பெண்களிடம் ஏமாற்றி பணம் பறித்து வருவதால், எனக்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது எனக்கூறி, உடனடியாக படத்தை அகற்றிவிடு எனக் கூறியுள்ளார்.

    அப்போது பாலாஜியை பயாஸ் கையால் தாக்கி கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது சம்பந்தமாக பாலாஜி ஆரணி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பயாசை செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம் பெண்களுடன் சமூக வலைதளங்களில் நண்பராக பழகியும், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறித்துள்ளார்.

    குறிப்பாக செல்போன் மற்றும் மெடிக்கல் கடை நடத்தி வருகிறேன். அதற்கு பணம் தேவை வருகிறது எனக் கூறி பணம் பறித்துள்ளார்.

    சில பெண்களிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ பதிவு செய்து கொண்டு மிரட்டி பணம் பறித்துள்ளார். அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

    பயாசிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது அவரிடம் இரவு நேரங்களில் பேசக்கூடிய இளம்பெண்கள் சிலர் அவருக்கு போன் செய்து கொண்டே இருந்தனர். மேலும் சில பெண்கள் மெசேஜ் அனுப்பினர்.

    இளம் பெண்களிடம் போலீசார் பயாசுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.

    அவர் ஒரு மோசடி நபர். அவரை நம்பி ஏமாற வேண்டாம். இனிமேல் இந்த எண்ணுக்கு போன் செய்யாதீர்கள் என அறிவுரை கூறினர்.

    இதனையடுத்து பயாஸ் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போளுர் கிளை சிறையில் அடைத்தனர்.

    ஆரணியில் இன்ஸ்டாகிராமில் 100 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலைவீசி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!