Connect with us

    தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியின் இரு கைகளையும் வெட்டிய சைக்கோ கணவர்..!

    Kerala husband and wife

    Viral News

    தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியின் இரு கைகளையும் வெட்டிய சைக்கோ கணவர்..!

    தன்னை விட்டு பிரிந்து சென்று ஐந்து வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த மனைவியின் இரண்டு கைகளையும் கணவர் வெட்டி வீசி விட்டு தப்பிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Kerala husband and wife

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா ஏழாம் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்.

    இவருக்கும் வித்யா என்கிற பெண்ணுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இருக்கிறது. ஒரு வருடம் மட்டுமே இவர்கள்

    சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

    அந்த ஒரு வருடத்திற்கு உள்ளேயே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

    இதனால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக வித்யா கணவனை விட்டு பிரிந்து சென்று கடந்த ஐந்து வருடங்களாக தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.

    மேலும், இருவரும் விவகாரத்தை கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் வித்யாவின் வீட்டிற்கும் சென்றிருக்கிறார் சந்தோஷ்.

    ஐந்து வருடங்களுக்கு பின்னர் திடீரென கணவர் தன் முன் வந்து நிற்பதை பார்த்து வித்யா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    இதிலிருந்து வித்யா மீள்வதற்குள் அவரை கடுமையாக அடித்து உதைத்து இருக்கிறார்.

    அடிபட்ட வித்யா வலியால் துடித்து கொண்டிருந்தபோது, தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து வித்யாவின் இரண்டு கைகளையும் வெட்டி இருக்கிறார்.

    ஒரு கையை மணிக்கட்டு வரைக்கும் வெட்டி இருக்கிறார். இன்னொரு கையை முழங்கை வரைக்கும் துண்டாக வெட்டி இருக்கிறார்.

    இது போதாது என்று வித்யாவின் தலை முடியை வெட்டி இருக்கிறார். தலையிலும் அவர் வெட்டி வெட்டியதால் காயங்கள் உள்ளன.

    அப்போது தன் மகள் வித்யாவை காப்பாற்ற அவரின் தந்தை விஜயன் போராடி இருக்கிறார்.

    அவரையும் கடுமையாக தாக்கி விட்டு சந்தோஷ் தப்பி ஓடி இருக்கிறார்.

    வித்யா, அவரது தந்தை விஜயன் இருவரும் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த சந்தோஷின் செல்போன் நம்பரை வைத்து அவரை கைது செய்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!