Connect with us

    “மின் வெட்டு; ஓ சாமியோ அணில் பிடிக்கணுமா; ஒரு அணிலுக்கு 100-ரூபாய் தான் சாமி” – வைரலாகும் திருமண வாழ்த்து போஸ்டர்..!!

    Power cut banner

    Tamil News

    “மின் வெட்டு; ஓ சாமியோ அணில் பிடிக்கணுமா; ஒரு அணிலுக்கு 100-ரூபாய் தான் சாமி” – வைரலாகும் திருமண வாழ்த்து போஸ்டர்..!!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் வாரிய ஊழியர் திருமணத்திற்காக வைக்கப்பட்டு இருக்கும் வாழ்த்து போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

    Power cut banner

    இரணியல் கோணத்தில் “மின் வெட்டு” அணில் பிடிக்க ரூ100, பீஸ் கட்ட ரூ-200 என கவுண்டமணி செந்தில் காமெடி வரிகளுடன் மின் வாரிய ஊழியர் ஒருவரின் திருமணத்திற்கு 2-கே கிட்ஸ் நண்பர்களால் வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    நண்பர்களின் திருமணம் என்றால் புது மாப்பிள்ளை புது பெண்ணையும் பல கேரக்டர்களில் சித்தரித்து திரைப்பட காமெடி வரிகளை வைத்து விதவிதமாக போஸ்டர் அடித்து ஒட்டுவதும் பிளக்ஸ் போர்டு வைப்பதும் 2கே கிட்ஸ்களின் வாடிக்கையாகி விட்டது.

    அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கோணம் பகுதியைச் சேர்ந்த மின் வாரிய ஊழியர் ஒருவரின் திருமணத்திற்கு அவரது நண்பர்களால் வைக்கப்பட்டது தான் இந்த பேனர்.

    மின்வாரிய ஊழியரான வினோஜி என்பவருக்கும் பட்டதாரி பெண் நிஷா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது.

    அவர்களை வாழ்த்தும் விதத்தில் “இ.கே.எம் ராக்ஸ்” என்ற 2-கே கிட்ஸ் நண்பர் குழுவால் பிளக்ஸ் போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

    அதில் திருமண தம்பதியை குறவன் குறத்தி போல் சித்தரித்து இரணியல் கோணத்தில் “மின் வெட்டு” ஓ சாமியோ அணில் பிடிக்கணுமா அணில் ஒரு அணிலுக்கு 100-ரூபாய் தான் சாமி என்று புதுப்பெண் கேட்பது போலவும் எண்ணோ எக்கோ பீஸ் கட்டணுமா ஒரு வீட்டிற்கு 200-ரூபாய் தான் என்று புது மாப்பிள்ளை கேட்பது போல் உள்ளது.

    அதற்கு அட கொக்கமக்கா உலக மகா தொழில்டா என கவுண்டமணியின் காமெடி வரிகள் தொடங்கி அது இல்லண்ணே எத்தனை வீட்டுல பீஸ் கட் பண்ணியிருப்பான் இப்ப அவனுக்க பீஸ பிடுங்க ஒருத்தி வந்துட்டா என செந்தில் பதில் சொல்லும் காமெடி வரிகளும் இடம் பெற்றுள்ளது.

    இது தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்து வருவதோடு இந்த போஸ்டரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விளையாட்டாக அடித்து ஒட்டப்படும் போஸ்டர்கள் பிளக்ஸ் பேனர்கள் அடுத்தவர்களை காயப்படுத்தாமல் இருந்தால் நல்லது.

    மின்வெட்டுக்கு காரணம் அணில்கள்தான் என அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னாலும் சொன்னார், அவரை இப்படியா ஓட்டுவது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!