Connect with us

    அம்பேத்கரின் பிறந்த நாளுக்காக பேனர் வைக்கும் போது, மின்சாரம் தாக்கி இளைஞர் பலி; கதறி அழுத கர்ப்பிணி மனைவி..!

    Youth died after fixing ambedkar banner

    Tamil News

    அம்பேத்கரின் பிறந்த நாளுக்காக பேனர் வைக்கும் போது, மின்சாரம் தாக்கி இளைஞர் பலி; கதறி அழுத கர்ப்பிணி மனைவி..!

    அம்பேத்கரின் பிறந்தநாள் பேனர் வைக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

    Youth died after fixing ambedkar banner

    அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    சமத்துவ நாளாக நேற்று தமிழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகம் நிகழ்ந்துள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம் கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவரின் மகன் சின்னத்துரை (வயது 31).

    இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார்.

    சின்னத்துரையின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

    இந்நிலையில், நேற்று அம்பேத்கர் பிறந்தநாள் விழா சிறப்பிக்கப்பட்ட நிலையில், அவரின் கிராமத்தில் இளைஞர்கள் பேனர் வைத்தனர்.

    அப்போது, பேனரின் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், பேனர் மீது கை வைத்திருந்த சின்னத்துரையின் உடலில் மின்சாரம் தாக்கியுள்ளது.

    இதனால் தூக்கி வீசப்பட்ட அவர், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த முத்துப்பேட்டை காவல் துறையினர், சின்னத்துரையின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!