Viral News
தொண்டையில் சிக்கிய பரோட்டாவால் மூச்சுத்திணறி உயிரிழந்த இளைஞர்..!
கேரள மாநிலம் இடுக்கியில் தொண்டையில் பரோட்டா சிக்கிக் கொண்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் பனையார் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் அப்பகுதியில் உள்ள லாரி ஒன்றில் கிளீனராக பணியாற்றி வருகிறார்.
நேற்றிரவு லாரியில் இடுக்கிக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற பாலாஜி லாரியிலேயே தங்கியுள்ளார்.
பரோட்டா பிரியரான பாலாஜி இரவு உணவுக்காக டிரைவரும், இவரும் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்டு கொண்டிருந்த போது பரோட்டா பாலாஜியின் தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனால் பரோட்டாவை விழுங்க முடியாமல் தவித்த பாலாஜிக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் உடனடியாக பாலாஜியை மருத்துமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
பரோட்டா சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
