Tamil News
சரக்கடித்து விட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு; கதறிய நண்பர்கள்..!
நண்பனின் பிறந்தநாள் விழாவில் சரக்கடித்து விட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த துயரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (வயது 21). இவர் ஒரு பிசிஏ பட்டதாரி.
சம்பவத்தன்று இவரின் நண்பருக்கு பிறந்தநாள் விழா வந்துள்ளது. இதனையடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ள்ளது.
அப்போது நன்கு குடித்துவிட்டு சிக்கன் ரைஸை நன்றாக சாப்பிட்டு உறங்கியுள்ளார். பின்னர், காலையில் அவரை எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை.
இதனால் பதறிப்போன நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் நள்ளிரவு நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பன் உயிரிழந்த செய்தியை அறிந்து நண்பர்கள் அழுது கதறினர். பெற்றோர்களும் மருத்துவமனைக்கு விரைந்து நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறிய சம்பவம் காண்போர் கண்களில் கண்ணீர் வர வழைத்தது.
மேலும், அவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.
மகாவிஷ்ணுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், வியாசர்பாடி காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
