Tamil News
இடி தாக்கியதில் டவுசரில் வைத்திருந்த செல்போன் வெடித்ததால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்…!!
சிவகங்கை அருகே இடி தாக்கியதில் டவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி.
இவர் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனபாக்கியம்.
இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
இந்நிலையில், அவர் மூலிகை செடிகள் பறிப்பதற்காக தனது கிராமத்தின் அருகே உள்ள மைதானத்திற்கு சென்றுள்ளார்.
இவர் தனது செல்போனை எப்பொழுதுமே வேஷ்டியின் உள்ளே டவுசர் பாக்கெட்டில் வைப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.
இந் நிலையில் திடீரென அவர் மீது இடி தாக்கியுள்ளது.
இதில் அவரது டவுசர் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
