Connect with us

    ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகளை அழைத்து, அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி அவர்கள் முன்னிலையில் திருமணம் செய்த இளைஞர்; குவியும் பாராட்டுக்கள்…!!

    Youth got married

    Tamil News

    ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகளை அழைத்து, அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி அவர்கள் முன்னிலையில் திருமணம் செய்த இளைஞர்; குவியும் பாராட்டுக்கள்…!!

    தருமபுரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைகளை அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டது பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

    Youth got married

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ராஜா.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

    தனது திருமண நிகழ்வில் ஆதரவற்ற முதியோர்களையும், குழந்தைகளையும் அழைத்து அவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.

    தனது ஆசையை மணப்பெண்ணிடம் தெரிவிக்க அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

    கடந்த இரு தினங்கள் நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு ஆதரவற்ற குழந்தைகளும், முதியவர்களும், பெரியவர்களும், காதுகேளாத குழந்தைகளும்,மாற்று திறனாளிகளும் அதிகளவில் அழைக்கப்பட்டிருந்தனர்.

    இவர்களை அத்தனை பேரையும், தனித்தனி வேன்களை ஏற்பாடு செய்து, மண்டபத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

    அங்கு அவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கு புதிய ஆடைகள் கொடுத்து மகிழ்ந்தார்.

    அதே போல் ஆதரவற்றவர்களுடன் சேர்ந்து புதுமணத்தம்பதிகள் போட்டோவும் எடுத்துக்கொண்டனர்.

    ஆதரவற்றவர்களை அழைத்து திருமணத்தில் கலந்துகொள்ள செய்தது அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பரபரப்பாகவும் ஆச்சரியமாகவும் பேசப்பட்டது..

    மேலும், திருமணத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மணமக்களை பாராட்டி சென்றனர்.

    இந்த நிகழ்வில் சந்தனகடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமியும் கலந்து கொண்டு, ராஜாவின் செயலால் ஆச்சரியப்பட்டுள்ளார்.

    இந்த திருமணம் குறித்து மாப்பிள்ளை ராஜா சொல்லும்போது, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதவரற்ற முதியவர்கள் ஆசிரமங்களிலியே உணவளித்து வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்களும் இது போன்ற திருமண விழாக்களுக்கு அழைத்து உணவளிப்பதால் அவர்கள் சுதந்திரமாக இருப்பார்கள் என்கிறார்.

    திருமணம் என்றாலே சொந்தக்காரர்கள்தான் ஆக்கிரமித்து நிறைந்து இருப்பார்கள்.

    இது நமக்கு பல வகைகளில் சந்தோஷம் தரக்கூடியதுதான் என்றாலும், சில சமயம், எவ்வளவுதான் பார்த்து பார்த்து கவனித்தாலும் ஏதாவது ஒரு குறையை சொல்லிவிட்டு சொந்தங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!