Viral News
தான் காதலித்த இரு பெண்களையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞர்; குடுத்து வச்சவன்யா நீ..!
ஜார்கண்ட் மாநிலத்தில் தான் காதலித்த இரு பெண்களையும் ஒரே நேரத்தில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் லோஹர்டகாவின் பாந்த்ரா பகுதியில் உள்ளது பண்டா கிராமம்.
இந்த கிராமத்தை சேர்ந்த சந்தீப் ஓரான் என்பவர் இப்பகுதியை சேர்ந்த குசும் லக்ரா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்திருக்கிறா.ர்.
இந்த காதலர்களுக்கு ஒரு குழந்தை ஒன்றும் இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் வேலை காரணமாக மேற்கு வங்காளத்திற்கு சென்றிருக்கிறார் சந்தீப்.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள செங்கல் சூளையில் கடந்த ஒருவருடமாக வேலைசெய்து வந்திருக்கிறார் சந்தீப்.
அப்போது அதே இடத்தில் பணிபுரிந்துவந்த சுவாதி குமாரி என்னும் இளம்பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது.
சுவாதிக்கும் சந்தீப்பை பிடித்துப்போகவே, இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில், பணிமுடிந்து சொந்த ஊர் திரும்பியிருக்கிறார் சந்தீப்.
காதலனை பிரிந்து இருக்க முடியாமல் அவ்வப்போது, ஜார்கண்ட் சென்று சந்தீப்பை சந்தித்து வந்திருக்கிறார் சுவாதி.
அப்படி ஒருநாள் தனது காதலனை சந்தித்து பேச சுவாதி வந்த போது விஷயம் அறிந்த சந்தீப்பின் கிராம மக்கள், தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், ஊரார் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றிருக்கிறது.
அப்போது, தனக்கு இரு பெண்களையும் பிடித்திருப்பதாகவும், இருவரையுமே சமமாக காதலித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் சந்தீப்.
மேலும், திருமணம் செய்துகொண்டால் இருவரையுமே ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
இரு பெண்களிடமும் இதுகுறித்து ஊரார் கேட்டபோது, இருவருமே ஓகே சொல்ல, அப்போதே அங்கேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது.
சந்தீப், குசும் மற்றும் சுவாதி ஆகியோருக்கு குங்குமம் வைத்து தனது மனைவிகளாக ஏற்றுக்கொண்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
