Connect with us

    தூக்கில் தொங்கிய மூத்த மகனை பார்த்து நிலைகுலைந்த தாய், இளைய மகனுடன் எடுத்த விபரீத முடிவு…!

    Vignesh who hang

    Tamil News

    தூக்கில் தொங்கிய மூத்த மகனை பார்த்து நிலைகுலைந்த தாய், இளைய மகனுடன் எடுத்த விபரீத முடிவு…!

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 46). இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (வயது 40).

    இவர்களுக்கு விக்னேஷ்(வயது 23), மணி(வயது 19) என இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    கோவிந்தராஜ் ஈரோடு பகுதியில் கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். விக்னேஷ் ITI படித்துள்ளார்.

    விக்னேஷின் தாய் பஞ்சவர்ணம் சகோதரன் மணி இருவரும் இப்பகுதியிலுள்ள செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வேலை முடித்துவிட்டு தாயும், அவரது இளைய மகன் மணியும் வீட்டிற்கு வந்துள்ளனர்.

    அப்போது மூத்த மகன் விக்னேஷ் தூக்கில் தொங்கி இறந்து இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    Vignesh who hang

    பின்னர் மகன் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தாயும், இளைய மகனும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டார் கதவை உடைத்துச் சென்று அவர்கள் இருவரையும் மீட்டனர்.

    இதையடுத்து அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மூத்த மகன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மூத்த மகன் தற்கொலை செய்து கொண்டதால், தாய் மற்றும் இளைய மகன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Continue Reading
    To Top
    error: Content is protected !!