Connect with us

    என்னடா இப்படி கிளம்பிட்டீங்க!! குடித்து விட்டு பாட்டியிடம் முத்தம் கேட்டு தகராறு செய்த இளைஞர்; அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

    Youth grandma

    Tamil News

    என்னடா இப்படி கிளம்பிட்டீங்க!! குடித்து விட்டு பாட்டியிடம் முத்தம் கேட்டு தகராறு செய்த இளைஞர்; அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

    Youth grandma

    நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    போலீசாரும், கோர்ட்டும், இது தொடர்பான வழக்குகளில் எவ்வளவோ அறிவுரைகளை சொல்லி, கடிவாளங்களை போட்டாலும், தண்டனை வழங்கினாலும், குற்றங்கள் குறைவதில்லை.

    அந்த வகையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குடித்து விட்டு தனது பாட்டியிடம் முத்தம் கேட்டு தகராறு செய்த இளைஞரின் செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மோரூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன்.

    கூலித் தொழிலாளியான இவர், தினம்தோறும் தண்ணியடித்து விட்டு அந்த பகுதிகளில் அலப்பறைகள் செய்வதுண்டு.

    இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல குடித்து விட்டு தெருவில் நடந்து வந்தார்.

    அப்போது எதிரே அப்பகுதியை சேர்ந்த சாந்தா என்ற மூதாட்டி நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மாதையன் பாட்டியை வழிமறித்து முத்தம் தருமாறு கேட்டுள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ந்து போன பாட்டி, மாதையனை சரமாரியாக திட்டிவிட்டு, அங்கிருந்து நகர முயற்சித்துள்ளார்.

    ஆனால், மாதையன் விடவில்லை.பாட்டியை தடுத்து நிறுத்தி, தகராறு செய்தார்.

    மேலும், ஆத்திரத்தில் மாதையன் அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து மூதாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதனால் கூச்சலிட்ட மூதாட்டியைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர்.

    தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தீவட்டிப்பட்டி காவல்துறையினர் மாதையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    தான் குடித்திருந்ததால் தவறாக நடந்து கொண்டதாகவும் தன்னை மன்னித்து விடுமாறும் மாதையன் கேட்டுள்ளார்.

    ஆனால், மாதையன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!