Tamil News
காதலிப்பதாக கூறி +2 மாணவியுடன் 5 ஆண்டுகளாக உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து பணம் பறித்த இளைஞருக்கு, திடீரென காத்திருந்த பயங்கர அதிர்ச்சி..!
+2 படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வைத்து, அதைக் காட்டி மிரட்டி அடிக்கடி பணம் பறித்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.
சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த +2 மாணவியின் பெற்றோர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து, லட்சக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதாக வாலிபர் ஒருவர் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்ற டிரம்ஸ் இசை கலைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே ஞானப்பிரகாசம் படித்துள்ளார் என்பது தெரிய வந்தது.
மேலும், இசைக் கச்சேரிகளில் டிரம்ஸ் வாசித்து வருவதும், கச்சேரிகள் இல்லாத நாட்களில் தனியார் பேக்கரி ஒன்றில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும் பள்ளி மாணவி 8- வது படிக்கும்போது முதல் அந்த மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
நாளடைவில் மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பலமுறை மாணவியுடன் தனது பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்டுள்ளார்.
மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை மாணவிக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்ட ஞானப்பிரகாசம் வாக்குமூலம் அளித்தார்.
அந்த மாணவியின் பெற்றோர் வசதியானவர்கள் என்பதால் அவர்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் வரைக்கும் இதுவரை பணம் வாங்கியிருக்கிறார் ஞானப்பிரகாசம்.
காதலன் கேட்கும் போதெல்லாம் அந்த மாணவியும் வீட்டில் இருந்து பணம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.
தற்போது கார் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.
அதனால் ஏழு லட்ச ரூபாய் பணம் கொண்டு வா என்று மாணவியிடம் சொல்ல அதற்கு அவர் மறுக்க, தன் செல்போனில் உள்ள மாணவியின் ஆபாச படங்கள் வீடியோக்களை காட்டியிருக்கிறார்.
7 லட்சம் பணம் தரவில்லை என்றால் இந்த வீடியோக்களை, படங்களை எல்லாம் இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் .
இதையடுத்து தனக்கு நேர்ந்த சிக்கலை பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார் அந்த மாணவி.
இதையடுத்து, ஞானப்பிரகாசம் மீது அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஞானப்பிரகாசம்.
கைது செய்யப்பட்ட ஞானப்பிரகாசத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
