World News
“ஓட்டலில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்” – இளம்பெண் மீது போலீசில் புகார் கொடுத்த இளைஞர்..!
ஓட்டலுக்கு வரவழைத்து பெண் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி தொடர்ந்து என்னை பாலியல் சித்திரவதை செய்தார் என்று ஆண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய வாலிபர் ஒருவர் செக்டார் 27 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகாரை கண்டு போலீசாரே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:
கர்னல் பகுதியில் உள்ள ராஜீவ் நகரில் வாடகை வீட்டில் நான் வசித்து வந்தேன்.
எனக்கு சமூகவலைதளம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து, செல்போன் நம்பரை பரிமாறிக் கொண்டோம்.
கடந்த சில நாட்களுக்கு அந்த பெண் எனக்கு போன் செய்து ஓட்டலுக்கு வரச்சொல்லி இருந்தார்.
நானும் அந்த பெண் சொன்ன ஓட்டலுக்கு சென்றேன்.
அங்கு சென்று இருவரும் மது குடித்தோம். அப்போது, அந்த ஓட்டலுக்கு வந்த அந்த பெண்ணின் கூட்டாளிகள் என்னை கடுமையாக தாக்கினர்.
பின்னர் அந்த பெண் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும், இதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டினார்.
பின்னர் அந்த ஓட்டலில் தன்னை அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாகவும் எப்படியோ ஓட்டலில் இருந்து தான் தப்பி வந்து விட்டதாகவும் போலீசில் அந்த நபர் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அங்கு இருந்த சிசிடிவி பதவிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
