Tamil News
நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்த இளைஞர்; டார்ச்சர் தாங்காமல் பெண் எடுத்த ஷாக் முடிவு…!
லாரி டிரைவர் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து ஆபாசமாக சித்தரித்து பாலியல் பலாத்காரம் செய்த நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் முதுநகர் செம்மங்குப்பம் பகுதியில் வசிக்கும் லாரி டிரைவருக்கு 2014- ம் ஆண்டு திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
லாரி டிரைவராக இருப்பதால், அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வருவார்.
சில சமயங்களில் வேலை காரணமாக வெளியூர் சென்று ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கழித்து வீட்டிற்கு வருவதும் உண்டு.
கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார் (30) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
நண்பர் என்ற முறையில் சசிக்குமார் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். லாரி டிரைவர் வெளியூருக்கு செல்லும்போதும், சசிக்குமார் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், 2018ம் ஆண்டு டிரைவர் லாரியில் வெளியூருக்கு சென்று இருந்தார்.
அப்போது டிரைவர் வீட்டுக்கு சசிகுமார் சென்றார். வீட்டில் லாரி டிரைவர் மனைவி குளிப்பதை செல்போனில் ரகசியமாக சசிகுமார் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை காண்பித்து சசிகுமார் தொடர்ந்து லாரி டிரைவர் மனைவியை நிர்பந்தப்படுத்தியும், ஆசைக்கு இணங்காவிட் டால் சமூக வலைதளங்களிலும், நண்பர்களிடமும் காட்டி அசிங்கப்படுத்து வேன் என மிரட்டியுள்ளார்.
இதன் காரணமாக பலமுறை சசிகுமார், லாரி டிரைவர் மனைவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதுகுறித்து லாரி டிரைவருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சசிக்குமாரை அவர் கண்டித்துள்ளார்.
இதன் பின்னர் கடலூரிலிருந்து மனைவி, குழந்தைகளுடன் தென்காசிக்கு சென்று அங்கு குடும்பத்துடன் லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார்.
சசிக்குமார் மற்றும் அவரது தந்தை இனிமேல் தவறு எதுவும் நடக்காது கூறிவிட்டு சென்றுள்ளனர்.
ஆனால் 6 மாதம் கழித்து மீண்டும் சசிக்குமார் லாரி டிரைவரின் மனைவி மற்றும் அவரது தந்தை, சகோதரர்கள் படங்களில் ஆபாச வார்த்தைகளை எழுதி அசிங்கமாக சித்தரித்து, சமூக வலைதளங்கள், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் வீடியோ பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சசிகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்
