Connect with us

    133 அதிகாரங்களை கொண்டு திருவள்ளுவரின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த இளைஞர்; குவியும் பாராட்டுக்கள்..!

    Thiruvalluvar drwaing

    Tamil News

    133 அதிகாரங்களை கொண்டு திருவள்ளுவரின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த இளைஞர்; குவியும் பாராட்டுக்கள்..!

    திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 133 அதிகாரங்களை கொண்டு திருவள்ளுவரின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

    Thiruvalluvar drwaing

    மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் உதயகுமார் மகன் பிரபாகரன்.

    இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கடந்த ஆண்டு பிஎஸ்சி பட்டம் முடித்து உள்ளார்.

    தற்போது மயிலாடுதுறையில் உள்ள நகராட்சி தன்னார்வ பயிலும் வட்டத்தில் குரூப்-1 போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர் பிரபாகரன், ஓவியம் வரைவதில் மிகுந்த நாட்டம் உடையவர்.

    திருவள்ளுவர் தினம் என்பதால் திருவள்ளுவரின் ஓவியத்தை வித்தியாசமான முறையில் வரைய அவர் முயற்சி செய்துள்ளார்.

    இதற்காக திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 133 அதிகாரங்களை கொண்டு திருவள்ளுவரின் உருவப்படத்தை அவர் வரைந்துள்ளார்.

    சுமார் இரண்டரை மணிநேர உழைப்பில் இந்த படத்தை அவர் உருவாக்கியுள்ளார். திருக்குறளின் அதிகாரங்களைக் கொண்டு திருவள்ளுவர் படத்தை வரைந்துள்ளார்.

    மாணவர் பிரபாகரனுக்கு, மயிலாடுதுறை திருக்குறள் பேரவை தலைவர் சிவசங்கரன் மற்றும் பேரவை நிர்வாகிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!