Tamil News
கள்ளக்காதலனுடன் மகள் உல்லாசம்; இடையூறாக இருந்த மருமகனை போட்டுத் தள்ளிய மாமியார்..!
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் அருகே, மகளின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, மருமகனை மாமியார் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர், சர்க்கார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருள்மணி (30). இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிகிறார்
இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமி (26) என்பவரும் சில ஆண்டுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் தம்பதிக்கு நித்ரன் (5), அகிலன் (3) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
அருள்மணிக்கு தண்ணியடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் தனது கணவர் மீது கோபித்துக் கொண்டு ஜோதிலட்சுமி அடிக்கடி அதே பகுதியில் உள்ள அவரது தாய் ஜானகி வீட்டுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் அருள்மணி விசாரித்தபோது, ஜோதிலட்சுமிக்கும் அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அருள்மணி, தனது மனைவி ஜோதிலட்சுமியை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஜோதிலட்சுமி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து அருள்மணி, மாமியார் வீட்டிற்குச் சென்று, மாமியார் மற்றும் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், மகளின் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த அவரது கணவர் அருள்மணியை கொலை செய்ய, மகளின் கள்ளக்காதலன் மணிகண்டனுடன் சேர்ந்து ஜானகி திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, போதையில் இருந்த அருள்மணியை, மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் லோகேஸ்வரன் (23) ஆகியோர் அருகே உள்ள ஏரிக்கு கூட்டி சென்று கற்கள் மற்றும் மது பாட்டிலால் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில், சம்பவ இடத்தில் அருள்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

அருள்மணி
தகவல் அறிந்த ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, மணிகண்டன், லோகேஸ்வரன், ஜானகி ஆகியோரை கைது செய்தனர்.
