Tamil News
ஏழு வருடம் உருகி உருகி காதலித்த காதலிக்கு, காதலனால் நேர்ந்த சோகம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வசை பகுதியில் வசிக்கும் 27 வயதான சயாலி ஷஹாசனே என்ற பெண் ஒரு கணினி பொறியாளர்.
இவர் 30 வயதான சாகர் அருண் நாயக் என்ற இயந்திர பொறியாளரை கடந்த பல ஆண்டாக காதலித்து வந்தார்.
அவர்கள் இருவரும் வசையில் உள்ள கமானில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.
மேலும் அவர்கள் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்ததால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் திடீரென்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது .
இதனால் அந்த காதலன் தனது காதலியை ஒரு ஹோட்டல் ரூமிற்கு கூடி சென்று அங்கு அவரை ஒரு கயிற்றால் கழுத்தை நெரித்து பின்னர் தலையணையால் நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
அப்போது நடந்த மோதலில் அந்தப் பெண் உயிர் பிழைக்கப் போராடத் தொடங்கியபோது, அந்த நபர் தனது பையில் இருந்து ஒரு பிளம்பிங் கருவியை எடுத்து, இடது காதுக்கு மேல் அவரது தலையில் அடித்ததால் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டது.
இதனால் அந்த பெண் பொறியாளர் அதே இடத்தில் இறந்து விட்டார்.
அதன் பின்னர் அந்த காதலன் அந்த ரூமிலிருந்து வெளியே வந்து ஹோட்டல் பில் செட்டில் செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.
பின்னர் அந்த ரூமிற்கு சென்ற ரூம் சர்வீஸ் பணியாளர் இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் சொன்னதும் போலீசார் அந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
